ஏர் இந்தியாவை ஏலம் எடுத்த டாடா சன்ஸ் நிறுவனம்

Auction Sons Air India Tata
By Thahir Oct 01, 2021 06:25 AM GMT
Report

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தனியார் வசம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

ஏர் இந்தியாவை ஏலம் எடுத்த டாடா சன்ஸ் நிறுவனம் | Air India Auction Tata Sons

இதையடுத்து நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியாவை வாங்கும் ஏலத்தில், பங்கேற்ற டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வாங்கும் டாடா சன்ஸ் நிறுவனம் குறிப்பிட்ட தொகை மற்றும் திட்டத்தை அமித் ஷா தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சர்கள் குழு ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.