400 ஆண்டுகள் பழமையான சிலை கடத்தல் முறியடிப்பு
By Fathima
சென்னையில் மிகவும் பழமை வாய்ந்த 400 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நிருத்ய கணபதி சிலை கடத்தலை சென்னை ஏர் கார்கோ சுங்கத்துறையினர் முறியடித்துள்ளனர்.
130 கிலோ எடையும், 5.25 அடி உயரமும் கொண்ட குறித்த சிலை, காஞ்சிபுரத்தில் உள்ள வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிலையை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருந்த போது, பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்துள்ள அதிகாரிகள் மேலதிக விசாரணையை தொடர்ந்துள்ளனர்.
பழங்கால சிற்ப சாஸ்திர நுட்பங்களின் அடிப்படையில் புராண மரபுகளை முழுமையாகப் பின்பற்றி பித்தளையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.