2026க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி கட்டி முடிக்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

Government Of India
By Thahir Nov 23, 2022 02:34 AM GMT
Report

2026 அக்டோபர் மாதத்திற்குள் எப்படி எய்ம்ஸ் கட்டிடத்தை கட்டி முடிப்பீர்கள் என விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கட்டிமுடிக்க உத்தரவிட வேண்டும் என மதுரையை சேர்ந்த கேகே.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

2026க்குள் எய்ம்ஸ் மருத்துவமனை எப்படி கட்டி முடிக்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி | Aims Constructions Work Issue

இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கான பணிகள் நடைபெறுவதாக பதில் கூறியிருந்தனர். ஆனால், இதனை எதிர்த்து , மத்திய அரசு இன்னும் எய்ம்ஸ் கட்டுமான பணிகளை ஆரம்பிக்கவில்லை. என கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தார் கே.கே.ரமேஷ்.

இந்த வழக்கு மீதான விசாரணையில் மத்திய அரசு தரப்பில், ‘ மதுரை எய்ம்ஸ் கட்டுவதற்கு சுமார் 1900 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. எய்ம்ஸ் கட்டுவதற்கு 5 வருடங்கள் ஆகும். 2026 அக்டோபருக்குள் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்.

தற்போது எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி கட்டிடத்தில் நிர்வாகிகளுடன் செயல்பட்டு வருகிறது ஆகவே இந்த வழக்கை எடுக்க கூடாது என மத்திய அரசு தனது தரப்பு வாதத்தை மதுரை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்தது.

இந்த வாதத்தை ஏற்று, 2026 அக்டோபர் மாதத்திற்குள் எப்படி எய்ம்ஸ் கட்டிடத்தை கட்டி முடிப்பீர்கள் என விரிவான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.