எய்ம்ஸ் செங்கலை எடுத்து வந்த உதயநிதியால் இதை செய்ய முடியுமா? விஜயபிரபாகரன் கேள்வி
எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை எடுத்து வந்து அதிமுக-விடம் கேள்வி கேட்கும் உதயநிதியால், கச்சத்தீவில் இருந்து ஒருபிடி மண்ணை எடுத்து வர முடியுமா என விஜயபிரபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரான கிருஷ்ணகோபாலை ஆதரித்து விஜயபிரபாகரன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், முஸ்லிம்களுக்கும், எங்களுக்கும் எப்போதுமே ஒரு ஒற்றுமை இருக்கிறது. கேப்டன் எப்போது சிறுபான்மை இன மக்களுக்கு நல்லதே செய்வார். என்னுடைய தம்பி பெயர் கூட சவுகத் அலி தான், ஒரு சில பிரச்சனைகளால் மட்டுமே சண்முகபாண்டியன் என மாற்றம் செய்யப்பட்டது.
நான் அரசியலை தொடங்கியது மணப்பாறை தொகுதியில் தான், தற்போது எங்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன் என பேசினார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை கொண்டு வந்து அதிமுக-விடம் கேள்வி கேட்கும் உதயநிதியால், கச்சத்தீவிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வர முடியுமா? தங்களிடமே குறைகளை வைத்து கொண்டு இவர்கள் கேள்வி கேட்கிறார்கள், இந்த தேர்தலில் எங்களுடைய கூட்டணியே அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.