நடுவானில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை - காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்!

Bengaluru
By Sumathi Aug 29, 2023 08:04 AM GMT
Report

நடுவானில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை எய்ம்ஸ் மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.

போராடிய குழந்தை

பெங்களூருவில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் ஒன்று இரவு ஒன்பது மணிக்கு டெல்லி செல்வதற்காக கிளம்பியது. அதில், டெல்லியின் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தைச் சேர்ந்த(AIIMS)

நடுவானில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை - காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்! | Aiims Doctors Saved Baby Mid Flight Bangalore

ஐந்து மருத்துவர்கள் ஒரு மருத்துவ கருத்தரங்கில் கலந்து கொண்டுவிட்டு டெல்லி திரும்புவதற்காக பயணம் செய்தனர். இந்நிலையில், விமானத்தில் இருக்கும் இரண்டு வயது பெண் குழந்தைக்கு உடல் நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,

தீவிர சிகிச்சை 

மருத்துவர்கள் யாராவது விமானத்திற்குள் இருந்தால் உதவ முன்வருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனே, 5 பேரும் அந்தக் குழந்தையை பார்த்த போது, அந்தக் குழுந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு டெல்லி கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

நடுவானில் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தை - காப்பாற்றிய எய்ம்ஸ் மருத்துவர்கள்! | Aiims Doctors Saved Baby Mid Flight Bangalore

சுயநினைவு இல்லாமலும், நாடித் துடிப்பும் மிக மோசமான இருந்துள்ளது. தொடர்ந்து, இதயத்திற்கு தேவையான அழுத்தம் கொடுத்தும், மின்சார அதிர்வு கொடுத்தும் சிகிச்சை அளித்தனர்.

அதன்பின், 45 நிமிடங்கள் 5 மருத்துவர்களும் மேற்கொண்ட தீவிர சிகிச்சையால் குழந்தை உயிர் பிழைத்தது. அதனையடுத்து, விமானம் நாக்பூருக்கு திருப்பி விடப்பட்டு குழந்தையை மருத்துவமனையில் சேர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.