அப்ப மதுரையில மட்டுமல்ல பீஹார்லையும் இதே நிலைதான் .. உதயநிதியின் செங்கல் பாணியை கையிலெடுத்த பீகார் மக்கள்!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனை இதுதான் என ஒரு செங்கலை எடுத்து காட்டி நடத்திய ஆர்ப்பாட்டம் தமிழக அரசியலில் பெரும் பரப்பை ஏற்படுத்தியது
இந்த நிலையில் உதயநிதி பாணியில் பீகார் மாநிலத்தில் உள்ள தர்பாங் என்ற பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க செங்கல் ஏந்தி அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த 2015ஆம் ஆண்டு ஒன்றிய நிதியமைச்சராக இருந்த அருண் ஜேட்லி பீகாரில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என அறிவித்தார். இந்த நிலையில், பீகார் மாநிலத்தின் தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
ஆனால் ஒரு வருடம் ஆகியும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் கூட நாட்டப்படவில்லை. இதனைக் கண்டிக்கும் விதமாக மிதிலா மாணவர் அமைப்பு, செப்டம்பர் 8ஆம் தேதி எய்ம்ஸ் அமையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தர்பங்காவில் அடையாள அடிக்கல் நாட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்காக வீடுகளிலிருந்து செங்கல் சேகரிக்கும் பணியை அந்த அமைப்பு மேற்கொண்டுள்ளது. தர்பங்காவில் உள்ள மக்களிடம் இருந்து ஒரு லட்சம் செங்கற்களை மாணவர் சங்கத்தினர் சேகரித்தவுடன் அதை மோடி அரசுக்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்
.உதயநிதி பாணியில் நடந்து வரும் இந்த போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழகத்தில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது தொடங்கும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரியாது என விளக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.