கொரோனா தாக்கிய ஆண்களுக்கு விந்து தரம் பாதிப்பு - AIIMS மருத்துவர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

COVID-19
By Nandhini Jan 05, 2023 09:33 AM GMT
Report

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு விந்து தரம் பாதிக்கப்படுகிறது என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

BF.7 கொரோனா வைரஸ்

சீனாவில் பிஎப் 7 எனப்படும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், தினசரி பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சீனாவில், கொரோனா பரவலையடுத்து பல கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. இந்தியாவிற்குள் ஊருடுவிய கொரோனா வைரஸ் மேற்குவங்கத்தில் 4 பேருக்கு பி.எப்-7 கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

4 பேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமெரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aiims-corona-virus-affected-sperm-quality-in-men

ஆண்களுக்கு விந்து தரம் பாதிப்பு

இந்நிலையில், கொரோனா தாக்கிய ஆண்களுக்கு விந்து தரம் பாதிக்கப்படுகிறது என்று எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில்,

கொரோனா தாக்கிய ஆண்களின் விந்தணுவின் தரம் பாதிக்கப்படுகிறது. பாட்னாவில் உள்ள AIIMS மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஆய்வில், SARS2 விந்துவில் இல்லை என்றாலும், 1வது மாதிரியில் இந்த ஆண்களின் விந்து தரம் மோசமாக இருந்தது தெரியவந்தது. 2.5 மாத இடைவெளிக்குப் பிறகும், அதன் உகந்த நிலையை எட்ட முடியவில்லை என்றனர்.