‘‘எலக்‌ஷன் வரைக்கும் எய்ம்ஸ் நம்ம கண்ட்ரோல்ல’’ - உதயநிதி தேர்தல் பிரச்சாரம்

election dmk stalin Udhayanidhi aiims
By Jon Apr 04, 2021 06:36 AM GMT
Report

தேர்தல் முடியும் வரை எய்ம்ஸ் மருத்துவமனையை தனது கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். அம்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோசப் சாமுவேலை ஆதரித்து, உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  ‘‘எலக்‌ஷன் வரைக்கும் எய்ம்ஸ் நம்ம கண்ட்ரோல்ல’’ - உதயநிதி தேர்தல் பிரச்சாரம் | Aiims Control Udhayanidhi Election Campaign

பிரச்சார கூட்டத்தில் பேசிய உதயநிதி,கடந்த 10 நாட்களாக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை காணவில்லை என பலர் தேடிக்கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும், 6ம் தேதி வரை எய்ம்ஸ் தனது கன்ட்ரோலில் தான் இருக்கும் எனவும், 7ம் தேதி மருத்துவமனையை ஒப்படைத்து விடுவேன் எனவும் கூறினார்.