ஐபிஎல் 2023 - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்...!

Cricket Hyderabad IPL 2023
By Nandhini Feb 23, 2023 06:34 AM GMT
Report

ஐபிஎல் 2023 சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி நிறைவடைந்தது. இப்போட்டியில் 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டு விளையாடின. இந்த T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது முறையாக சாம்பியன் பட்டம் இங்கிலாந்து வென்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி -

டி20 ஃபார்மெட்டில் நடத்தப்பட்டு வரும் பிரான்சைஸ் லீக் தொடராக ஐபிஎல் இந்திய மட்டுமல்லாது உலகம் முழுவதும் இதற்கான ரசிகர்கள் ஏராளம். இந்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் கடந்த டிசம்பர் 23-ம் தேதி கொச்சியில் நடந்தது. இதில், 10 அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் ரிலீஸ் செய்யவுள்ள வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டது. 16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தாண்டு மார்ச் 31-ம் தேதி தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

aiden-markram-captain-sunrisers-hyderabad

கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம்

இந்நிலையில், ஐபிஎல் 2023 சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக எய்டன் மார்க்ரம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்கா டி20 லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் கேப்டனாக இருந்தவர் மார்க்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.