உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்து கொள்ள AICTE உத்தரவு
உக்ரைனில் நடக்கும் போர் காரணமாக, நாடு திரும்பிய இந்திய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை ஆகவே அங்கு பயின்று வரும் இந்திய மாணவ்ர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இந்திய அரசு அழைத்துவந்த நிலையில் அந்த மாணவர்களின் கல்வி நிலை குறித்து கேள்விஎழுந்தது.
இந்த உக்ரைனில் உயர்கல்வி பயின்று வந்த இந்திய மாணவர்களை இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும் என்று பலரும் அறிவுறுத்தினர். இந்த நிலையில் , உக்ரைனில் இருந்து பாதியில் திரும்பிய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்கள் சேர்த்து கொள்ள AICTE உத்தரவிட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 20,000 அதிகமான இந்தியமாணவர்களை இந்திய அரசு அழைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.