உங்க ஆதரவு யாருக்கு ? எடப்பாடியா .. தினகரனா .. பன்னீர் செல்வமா ? : சசிகலா சொன்ன அதிரடி பதில்

ADMK V. K. Sasikala
By Irumporai Sep 22, 2022 06:49 AM GMT
Report

டிடிவி தினகரன், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவரில் யாருக்கு எனது ஆதரவு என்பதில் கட்சி தொண்டர்கள் முடிவே இறுதியானது என சசிகலா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் சசிகலா தனது சுற்றுப்பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டார்.

 மக்கள்தான் முடிவு செய்யணும்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவிடம் அதிமுக கட்சி குறித்து செய்துயாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் கூறிய சசிகலா : மக்கள் பிரச்சனையை குறித்து கேள்வி எழுப்பலாம்.

இது உட்கட்சி பிரச்சனை, இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து கேட்க வேண்டிய அவசியமில்லை என ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு மாறி மாறி டெல்லி சென்று வருகிறார்கள்.

உங்க ஆதரவு யாருக்கு  ? எடப்பாடியா .. தினகரனா .. பன்னீர் செல்வமா ? : சசிகலா சொன்ன  அதிரடி பதில் | Aiadmks Internal Sasikala Action Answer

பிரதமர் மோடி தான் இருவரது பிரச்சனையை தீர்த்து வைத்ததாகவும் சொல்லப்படுகிறது என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய சசிகலா அதிமுக உட்கட்சி குழப்பத்தில் சசிகலா யாருக்கு ஆதரவு என்ற கேள்வி இது அதிமுக கழக தொண்டர்கள் எடுக்கும் முடிவு, அவர்கள் யாரை சொல்கிறார்களோ அவர்கள்தான். தொண்டர்கள் தான் அதிமுக, அவர்கள் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என கூறினார்.

கட்சி தொண்டர்கள் முடிவே எனது முடிவு

டிடிவி தினகரன், பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய மூவரில் யாருக்கு எனது ஆதரவு என்பதில் கட்சி தொண்டர்கள் முடிவே இறுதியானது என தெரிவித்தார். தமிழக மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நிச்சயம் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவோம் எனவும் கூறினார்.

மேலும், மக்கள் விரோத செயல்பாடுகளால் மக்கள் திமுகவை விட்டு விலகி வருகின்றனர். மின் கட்டண உயர்வு போன்றவற்றை திசை திருப்பவே ஆ.ராசா அப்படி பேசியுள்ளார். தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது என்றும் குற்றசாட்டினார்.