அதிமுக 5 ஆண்டு ஆட்சியில் எதுவும் செய்யாதது ஏன்? : மு.க. ஸ்டாலின் கேள்வி

election dmk aiadmk Edappadi stlain
By Jon Mar 18, 2021 12:52 PM GMT
Report

தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம், சொன்னதை செய்வோம், செய்வதையே சொல்வோம் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளார். கும்மிடிப்பூண்டி திமுக வேட்பாளர் டி.ஜெ.கோவிந்தராசன், பொன்னேரி காங்கிரஸ் வேட்பாளர் துரை.சந்திரசேகருக்கு வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம், கும்மிடிப்பூண்டி தொகுதியில் அனைத்து முக்கிய அம்ச கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

தொழிற்சாலைகளும் உருவாக்கப்படும் என கூறினார். திமுக தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பி அடித்து அதிமுக தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளனர். மேலும், 2016ல் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மத்திய அரசுக்கு அனுப்பிய நீட் தேர்வு ரத்து மசோதாவின் நிலை என்ன என்று தெரியவில்லை? ஆவின் பால் விலையை குறைப்போம் என்று வாக்குறுதியை அளித்த அதிமுக அரசு குறைக்கவில்லை.

அனைவருக்கும் செல்போன் என்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதா அதிமுக? 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது செய்யாதது ஏன்? வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாக கொடுப்பதா? என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின் . திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றப்படும் என கூறினார்.