அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து - அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு
ADMK
AIADMK
Chennai
Edappadi K. Palaniswami
By Thahir
ஏப்ரல்-7 ஆம் தேதி நடைபெற இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டம் ரத்து
சென்னையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

ஒரு சில காரணங்களால் 7.04.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த கழக செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/2fGDeQj01N
— AIADMK (@AIADMKOfficial) April 4, 2023