மனம் போன போக்கியில் ஊடகங்கள் செயல்படுகிறது.. விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை!

media admk
By Irumporai Jul 12, 2021 03:28 PM GMT
Report

இனி தொலைக்காட்சி ஊடக விவாதங்களில் அதிமுக பங்கேற்காது என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.

ஒபிஎஸ்  ஈபிஎஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் மக்களின் அடிப்படை தேவைகள், தினசரி பிரச்னைகள் பல இருக்கும்போது.

அதைப்பற்றியெல்லாம் சிறிதளவும் கவலைப்படாமல் ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்கக்கூடிய ஊடக நிறுவனங்கள்.

அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், சிறுமைப்படுத்தும் நோக்கிலும் மனம் போன போக்கியில் ஊடக அறத்திற்கு புறம்பாகவும், கழக தலைவர்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதத்திலும் விவாத தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது உள்ளபடியே மனதிற்கு வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது.

மனம் போன போக்கியில் ஊடகங்கள் செயல்படுகிறது.. விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது  ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை! | Aiadmk Will Noparticipate In Discussion Media

மேற்சொன்ன காரணங்களால், ஊடக விவாதங்களில் அதிமுக சார்பில் கழக நிர்வாகிகளோ, செய்தி தொடர்பாளர்களோ, கழகத்தை சார்ந்தவர்களோ யாரும் இனி பங்கேற்கமாட்டார்கள், எங்களை பிரிநிதிப்படுத்துவதாக கூறிக்கொண்டு யாரையும் வைத்து பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மனம் போன போக்கியில் ஊடகங்கள் செயல்படுகிறது.. விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது  ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டறிக்கை! | Aiadmk Will Noparticipate In Discussion Media

கழகத்தின் பெயரை வேறு எந்த வகையிலும் பிரதிபலிக்கும்படி யாரையும் தாங்கள் ஊடக வழியாக கருத்துக்களை தெரிவிக்க அழைக்கவோ அனுமதிக்கவோம் வேண்டாம்.எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.