கோஷம் எழுப்பிய அதிமுக தொண்டர்கள்: திமுக வேட்பாளரை தாக்க முயன்றதால் பரபரப்பு
கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளரான கார்த்திக்கேய சேனாபதியை அதிமுக-வினர் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகின்றனர்.
இருவருமே பலம் வாய்ந்தவர்கள் என்பதால், கடந்த ஒரு மாதமாகவே பரபரப்பு நிலவி வந்தது, இந்நிலையில் வாக்குபதிவு நடைபெறும் இடத்தை திமுக வேட்பாளரான கார்த்திகேய சேனாபதி பார்வையிடச் சென்றார். அப்போது அங்கிருந்த அதிமுக பிரமுகர்கள் சிலர், திமுக வேட்பாளருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், அவரை தாக்க முற்பட்டனர்.
இதனால் பரபரப்பு நிலவவே, போலீஸ் அதிகாரிகள் இருவரையும் சமாதானப்படுத்தினர், இதனையடுத்து வாக்குசாவடிக்கு முன்பாக அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து கார்த்திகேய சேனாபதி தலைமையில், திமுகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.