இனி நமக்குள் பிரிவில்லை - ஒன்றாக இணைந்த அதிமுக அணிகள்

ADMK Edappadi K. Palaniswami
By Karthikraja May 27, 2026 06:48 AM GMT
Report

அதிமுக எம்எல்ஏக்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது ஒன்றிணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் பிளவு

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக 172 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

தொடர் தோல்விகளால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி ஏற்பட்டு, சி.வி.சண்முகம் தலைமையில் சில எம்எல்ஏக்கள் ஒரு அணியாக செயல்பட்டு வந்தனர்.  

இனி நமக்குள் பிரிவில்லை - ஒன்றாக இணைந்த அதிமுக அணிகள் | Aiadmk Two Divisions To Rejoin Sp Velumani Eps

மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவாக 25 அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

இந்நிலையில், தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்த அந்த எம்எல்ஏக்கள் மீது கட்சி தடை தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர்.

இனி நமக்குள் பிரிவில்லை

இந்நிலையில், சிவி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவரது அணியில் இணைந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், இரு அணிகளும் ஒன்றாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் “ - அம்மா 

கோடான கோடி தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இந்த எஃகு கோட்டையை இனி எவராலும் அசைக்க முடியாது!

இனி நமக்குள் பிரிவில்லை.. இந்த எஃகு கோட்டையை தகர்க்க இனி எவருக்கும் வழியில்லை.

நம் இலக்கு ஒன்றுதான். அது கோட்டையில் மீண்டும் நமது இரட்டை இலை கொடி பறப்பது மட்டுமே!" என பதிவிட்டுள்ளது.