இன்று வெளியாகிறது அதிமுக 2வது வேட்பாளர் பட்டியல்

list candidate aiadmk
By Jon Mar 08, 2021 01:11 PM GMT
Report

அ.தி.மு.க.,வின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் இன்று(மார்ச் 8) வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க., கூட்டணியில் தற்போதைய சூழலில் பா.ம.க., - பா.ஜ கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றில், பா.ம.க.,வுக்கு, 23; பா.ஜ.,வுக்கு, 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தேமுதிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என தெரிகிறது.

இதுதவிர சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி என ஒதுக்கீடு செய்து, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட அதிமுக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்புள்ளது, இந்த பட்டியலில் அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் இடம்பெறும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே அ.தி.மு.க., சார்பில், இம்மாதம் 5ம் தேதி, முதல் கட்டமாக, ஆறு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.