தமிழகம் மின்மிகை மாநிலம் என்று அதிமுக பீற்றிக் கொள்வது உண்மையல்ல: ப.சிதம்பரம்

tamilnadu state aiadmk chidambaram
By Jon Mar 27, 2021 11:03 AM GMT
Report

ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,தமிழ்நாடு மின் மிகை மாநிலம் என்று அஇஅதிமுக அரசு பீற்றிக் கொள்கிறது.இது உண்மையா என்றால் உண்மையல்ல. என கூறியுள்ளார் மின் மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள்.

அந்த நிலையில் தமிழ்நாடு் இல்லை என்பதே உண்மை.தமிழ்நாட்டின் மின்சாரத் தேவையில் 50% மட்டுமே தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது, 50 % வெளி்மாநிலங்களில் வாங்குகிறோம். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று எப்படிச் சொல்லமுடியும்? எனத் தெரிவித்துள்ளார்.  

மேலும் பட்டாசு திரி தயாரிப்புத் தொழில் குடிசைத் தொழிலாக அங்கீகரிக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி கூறியிருக்கிறார் அவர் 5 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார் என்பதை மறந்து விட்டாரோ என்று தோன்றுகிறது என தனது ட்வீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.