”தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த அதிமுக முயன்றது” - வாக்களித்த பின் ஸ்டாலின் பேட்டி

election dmk stalin aiadmk
By Jon Apr 06, 2021 11:24 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இன்று காலை 7 மணி தொடங்கி மாலை ஏழு மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் காலை முதல் மக்கள் வாக்களிக்கத் தொடங்கினர்.

பிரபலங்கள், அரசியல்வாதிகள் காலையிலே தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். திமுக தலைவர் ஸ்டாலினும் தன்னுடைய குடும்பத்தினருடன் எஸ்.ஐ.ஈ.டி கல்லூரியில் வாக்கு செலுத்தினார்.  

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஸ்டாலின், “தோல்வி பயத்தால் அதிமுக தேர்தலை நிறுத்த வலியுறுத்தியது. ஆனால் தேர்தல் ஆணையம் அதை நிராகரித்துவிட்டது.

குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமை ஆற்றியிருக்கிறோம். மக்களின் எண்ணம் ஆளுங்கட்சிக்கு எதிராக உள்ளது. தமிழகம் முழுவதும் மக்கள் அதிக அளவில் வாக்களிக்க வருகிறார்கள் என தகவல்கள் வருகின்றன” என்றார்.