எடப்பாடி பழனிசாமி விருந்தை புறக்கணித்த செங்கோட்டையன் - மீண்டும் வெடித்த பூகம்பம்
எடப்பாடி பழனிசாமி அளித்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இபிஎஸ் விருந்து
அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரவு விருந்து கொடுத்தார்.
இதில் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மீன் வறுவல், மட்டன் சுக்கா, முட்டை, இறால் தொக்கு ஆகிய 7 வகையான அசைவ உணவுகளும், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, சாதம், சாம்பார், ரசம், பொரியல், அவியல் என சைவ உணவுகளும் இடம் பெற்றிருந்தன.
செங்கோட்டையன் புறக்கணிப்பு
இந்நிலையில் இந்த இரவு விருந்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்பட்டது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற கருத்தை செங்கோட்டையன் வலியுறுத்தி வருகிறார்.
தற்போது இந்த நிகழ்ச்சியை புறக்கணித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசைன், மூத்த தலைவர்கள் பொன்னையன், தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.வேலுமணி, வளர்மதி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் எம்பிக்களும் பங்கேற்றனர். பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் அமர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உணவருந்தினார்.