அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்தார் இபிஎஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி.
கட்சி தேர்தல்
சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் எடப்பாடி பழனிசாமி. இடைக்கால பொதுச்செயலாளராக உள்ள நிலையில் தேர்தல் மூலம் பொதுச்செயலாளராக தேர்வாக இபிஎஸ் போட்டியிடுகிறார். இபிஎஸ் மனுவை 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிந்தனர், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிந்தனர்.
இபிஎஸ் தாக்கல்
எடப்பாடி பழனிசாமியை போட்டியின்றி அதிமுக பொதுச்செயலாளராக்க மூத்த நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
மார்ச் 26-ல் நடக்கும் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய நாளை பிற்பகல் 3 மணி வரை அவகாசம் உள்ளது. போட்டியிடுவோரின் பெயரை 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் ரூ.25,000 கட்ட்டணம் செலுத்தி விருப்ப மனு பெறலாம். நாளை மறுநாள் வேட்புமனு பரிசீலனை நடைபெறும், வேட்புமனுவை திரும்ப பெற மார்ச் 21 கடைசி நாளாகும்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : சர்வதேச நீதி கோரும் விஜய் தணிகாசலம் IBC Tamil

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
