வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக

election dmk aiadmk candidates
By Jon Mar 05, 2021 01:18 PM GMT
Report

2021 தேர்தலுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, இடையே கடும் போட்டி நிலவுகின்றது. இதில் பெரும்பாலான கட்சிகள் தொண்டர்களிடம் இருந்து விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு நேர்காணலை நடத்தி வருகின்றன.

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக இடம்பெற்றுள்ளது. தேமுதிக - அதிமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது.

அதிமுக வெளியிட்டுள்ள ஆறு சட்டசபைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது

1.போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்

2.எடப்பாடி தொகுதியில் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமி போட்டியிடுகிறார்

3.ராயபுரத்தில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார்

4. சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்

5.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுகிறார்

6.தேன்மொழி நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்