அதிமுக ஆட்சியை அகற்றியே ஆக வேண்டும் - திமுகவின் திட்டம் என்ன?
தமிழகத்தின் 10 ஆண்டுகாலமாக அதிமுக ஆட்சியில் இருக்கும் அதிமுகவை அகற்றி அதிகாரத்தை கைப்பற்ற திமுக கடுமையாக முயன்று வருகிறது. இதற்கான பல திட்டங்களை வகுத்துள்ளது. 234 தொகுதிகளை மூன்றாக பிரித்தது திமுக. எளிதில் வெல்லக்கூடிய தொகுதி, சிரமப்பட வேண்டிய தொகுதி, அதிமுக வசமுள்ள தொகுதி என லிஸ்ட்டை உருவாக்கி இருக்கிறது.
அதிமுக வசம் இருக்கும் தொகுதி என்றால் அங்கு திமுக பெரிதாக கவனம் செலுத்தாது. இதுவரையில் அப்படி தான் இருந்தது. ஆனால் இந்த முறை, அதிமுக வசமிருக்கும் தொகுதிகளை தன் வசப்படுத்த திமுக திட்டமிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் வேட்பாளர்களை திமுக களமிறக்கியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக அமைச்சர்களை எதிர்த்து திமுக நேரடியாக களம் இறங்கும் என ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த விதத்தில் அதிமுக அமைச்சர்களை குறிவைத்து திமுக காய்களை நகர்த்தி வருகிறது.
அதிமுக அமைச்சர்களுக்கு எதிராக வலுவான வேட்பாளர்களை நிறுத்துவதோடு மட்டுமல்லாது அவரின் தோல்வியை குறிப்பாக பட்டியலிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது
அதிமுகவின் முக்கிய அமைச்சர்களை வீழ்த்திவிட்டால் அது திமுகவுக்கு கூடுதல் பலமாகமாக இருக்கும் என்று திமுக தலைமை யோசிக்கிறது.