‘நீங்க பேசுங்க நாங்க போறோம் ’ : ஓபிஎஸ் பேச்சை கேட்காமல் கலைந்து சென்ற பொதுமக்கள் கலக்கத்தில் அதிமுக !
ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் அவர் பேச்சை பொதுமக்கள் கவனிக்காமல் கலைந்து சென்றதால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பூர் யூனியன் மில் சாலையில் அதிமுக சார்பில் திருப்பூர் வடக்கு, தெற்கு காங்கேயம் மற்றும் பல்லடம் சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய துணை முதல்வர் கடந்த 10 ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எதுவும் இல்லாமல் தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது. மின்பற்றாக்குறையை போக்க தற்போது மின் மிகை மாநிலமாக தமிழகம் மாற்றப்பட்டுள்ளது என கூறினார். இவ்வாறு அதிமுகவின் சாதனைகளை கூறி வாக்கு சேகரித்த துணை முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் போதே கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம். மேடையிலிருந்த அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்.
துணை முதல்வர் பேசி முடிப்பதற்கு முன்பாகவே நாற்காலிகள் காலியானது. அதிமுக கட்சியனரிடையே கலக்கத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.