அதிமுக போராட்டங்கள் தள்ளிவைப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Dec 12, 2022 10:23 AM GMT
Report

திமுக அரசை கண்டித்து நாளை நடைபெறவிருந்த போராட்டம் 14 மாவட்டங்களில் ஒத்திவைக்கப்படுவதாக ஈபிஎஸ் அறிவிப்பு.

போராட்டம் ஒத்திவைப்பு 

திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் நாளை போராட்டம் நடைபெறும் என்று எதிர்க்கட்சித் தலைவரும்,  அதிமுக இடைக்காலர் பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி  அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் மழை காரணமாக 14 மாவட்டங்களில் இந்த போராட்டம் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

அதிமுக போராட்டங்கள் தள்ளிவைப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு | Aiadmk Protests Postponed

அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், கடலூர், தஞ்சை, விருதுநகர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நாளை போராட்டம் நடைபெறாது என்றும், அதற்கு பதிலாக 21ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.