ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்பாட்டம்
வேலூரில் முதலமைச்சர் எடப்பாடியை அவதூறாக பேசிய .திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசாவை கண்டித்து ஆர்பாட்டம் ராசா படத்தை தீயிட்டு எரித்து அதிமுகவினர் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவதூறாக பேசிய திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் முதல்வரை அவதூறாக பேசிய ராசாவின் உருவப்படத்தையும் தீயிட்டு கொளுத்தி தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர் இதே போன்று காட்பாடி குடியாத்தத்தில் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு ஆ.ராசாவின் உருவ பொம்மையை தீயிட்டு கொளுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. தமிழகம் முழுவதும் ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.