அதிமுக பொய் பிரச்சாரம் செய்து வெற்றியடைய நினைக்கின்றனர் - ஸ்டாலின் பேச்சு

politics dmk stalin aiadmk
By Jon Apr 05, 2021 10:36 AM GMT
Report

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து ஐஸ்ஹவுஸ் பகுதியில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக மீது குற்றச்சாட்டு இருக்கின்றது என அதிமுகவினர் கூறி வருகின்றனர்.

அப்படி குற்றச்சாட்டு இருந்திருந்தால் இந்த பத்தாண்டு கால ஆட்சியில் நடவடிக்கை எடுக்காதது எதற்காக என கேள்வி எழுப்பினார். மேலும் எனது மகள் வீட்டில் வருமான வரி சோதனைக்கு வந்த அதிகாரிகள் டீ சாப்பிட்டு சென்றனர். இந்த மாதிரியான அச்சுறுத்தல்கள் எதுவும் திமுகவின் வெற்றியை ஒருபோதும் பாதிக்காது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.