அதிமுகவுக்கு அதிகப்படியான வாக்குகள் பெற்றுத்தருவோருக்கு 10 பவுன் தங்க செயின் பரிசு
அதிமுகவில் ஆவடி மற்றும் அம்பத்தூர் தொகுதியில் அதிகப்படியான வாக்குகளை பெற்றுத்தரும் பகுதி செயலாளர்களுக்கு 10 பவுன் தங்க செயின் பரிசு என அதிமுக திருவள்ளூர் மாவட்ட செயலாளரும் அம்பத்தூர் சட்டமன்ற வேட்பாளருமான அலெக்சாண்டர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேச்சு. அதிமுக திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் அவர்களை பாண்டியராஜன் அவர்கள் இருவரும் மரியாதை நிமித்தமாக சந்தித்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மற்றும் அம்பத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட இருக்கும் அலெக்சாண்டர் பாண்டியராஜன் இருவரும் ஒருவரை ஒருவர் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து கொண்டனர்.
அப்பொழுது கட்சியின் பகுதி கழக செயலாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அதிமுகவில் ஆவடி மற்றும் அம்பத்தூர் தொகுதியில் அதிகப்படியான வெற்றி வாக்குகளை பெற்றுத்தரும் பகுதி செயலாளர்களுக்கு 10 பவுன் தங்க செயின் பரிசு மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் அதிரடியாக அறிவித்தார். அதையும் அமைச்சர் பாண்டியராஜன் செய்து விடுவர் என
கூறியது,கூடியிருந்த அதிமுக வினர் இடையே பெரும் சந்தோஷ சிரிப்பு அலையை ஏறப்படுத்தியது.