சீமானுக்கு கோடான கோடி நன்றிகள்;அரைவேக்காடு அண்ணாமலைக்கு.. பரபரப்பை கிளப்பிய அ.தி.மு.க போஸ்டர்!
நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் அண்மைக்காலமாக வார்த்தைப் போர் நிலவி வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை குறித்து கருத்து தெரிவித்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று சென்னையில் நடைபெற்ற பாஜக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை ,''எடப்பாடி பழனிசாமி தன்னை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை . இப்படித் தொடர்ந்து பேசுவதை நாங்கள் வேடிக்கை பார்க்கத் தயாராக இல்லை.நீங்கள் என்னதான் கூறினாலும் கூச்சல் போட்டாலும் உங்களால் இனிமேல் வெற்றி பெறவே முடியாது.
மக்கள் உங்களைப் புறக்கணித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன .மேலும் 2026 தேர்தலில் அதிமுக தோற்பது உறுதி எனத் தெரிவித்த கருத்திற்குத் தமிழகம் முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி இருக்கிறது.
இந்த நிலையில், திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "பெருவாரியான மாநிலங்களை ஆளுகிற கட்சியாக இருக்கக்கூடிய பா.ஜ.க மாநிலத் தலைவராக அண்ணாமலை இருக்கிறார்.
கோடான கோடி நன்றிகள்..
அதனால் அவருக்கு மதிப்பு மரியாதையும் கிடைக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வின் எடப்பாடி கே பழனிச்சாமி ஒன்றிய செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக அமைச்சராக முதலமைச்சராக என படிப்படியாக முன்னேறியவர். அவரை தரக்குறைவாகப் பேசுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சீமான் பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க-வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர் . அதில் ,நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாகக் கோடான கோடி நன்றிகள்.
அரைவேக்காடு அண்ணாமலைக்கு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் பெருமைகளைச் சொல்லிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாகக் கோடான கோடி நன்றிகள் .என்று இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.