அதிமுக ஆட்சியில் போலீசாரின் கண்ணியம் சீர்குலைந்துவிட்டது - கமல் ஹசன் குற்றச்சாட்டு

police mnm aiadmk Indictment
By Jon Mar 10, 2021 03:24 PM GMT
Report

அதிமுக ஆட்சியில் காவல்துறை கண்ணியத்தை இழந்து வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் காவல்துறை தனது கண்ணியம் மற்றும் நேர்மை ஆகியவற்றை இழந்து தவறாக சென்றுவிட்டது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹசன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஓமலூருக்கு அருகே இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருந்த டீக்கடையை அடித்து நொறுக்குகிறார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் என்றும் இதே காரணம் சொல்லித்தான் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்தே கொன்றார்கள் எனவும் கூறிய கமல், அதிமுக ஆட்சியில் காவல்துறை கண்ணியத்தை இழந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.