அதிமுக அலுவலக கலவர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
அதிமுக அலுவலக கலவர வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதிமுக கலவரம்
அதிமுக தலைமை அலுவகத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்பின் அதிமுக அலுவலக கலவர வழக்கு விசாரணையை செப்டம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார்.

சிபி சிஐடிக்கு மாற்றம்
இதுதொடர்பாக புகார் அளித்தும் ஓபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் குற்றசாட்டியுள்ளார். எனவே, ஓபிஎஸ்-க்கு எதிரான புகாரை சிபிஐ அல்லது சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி சிவி சண்முகம் வழக்கு தொடுத்திருந்தார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி (பொதுக்குழுவின் போது) ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கலவரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.