அதிமுக அலுவலக பொருட்கள் யாருக்கு சொந்தம் : நீதிமன்றம் சொன்ன பரபரப்பு தகவல்
அதிமுக அலுவலகத்தில் சூறையாடப்பட்ட பொருட்களின் உரிமையாளரை தற்போது முடிவு செய்ய முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றம்முடிவு
அதிமுக தலைமை அலுவலகத்தில் சூறையாடப்பட்ட பொருட்களின் உரிமை யாருடையது என்பது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்கின் முடிவில் தான் தெரியவரும் சைதாப்பேட்டை நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள பிரதான வழக்கின் தீர்ப்பிற்கு பிறகே உரிமையாளரை முடிவு செய்ய முடியும்.
ஜூலை 11-ல் அலுவலகத்தில் பொருட்கள் சூறையாடப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரிக்கிறது. ஓபிஎஸ் தரப்பால் சூறையாடப்பட்ட பொருட்கள் சைதாப்பேட்டை நீதிமன்றம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களை கேட்டு இபிஎஸ் தரப்பின் சிவி சண்முகம் வழக்கு தொடுத்திருந்தார்.
முடிவு செய்ய முடியாது
கட்டுப்பாட்டில் உள்ள பொருட்களை இபிஎஸ் தரப்பிடம் ஒப்படைக்க கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு வைத்திலிங்கமும் மனு கொடுத்திருந்த்தார். இந்த நிலையில், அதிமுக அலுவலகத்தில் சூறையாடப்பட்ட பொருட்களின் உரிமையாளரை தற்போது முடிவு செய்ய முடியாது என சைதாப்பேட்டை நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது