கூட்டணியில் சேர்ந்தால் துணை முதல்வர் பதவி; பேரம் பேசிய அதிமுக - சீமான்
தமக்கு துணை முதல்வர் பதவி தருவதாக அதிமுக பேரம் பேசியதாக சீமான் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பதவி
சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக கூட்டணியில் நடிகர் விஜய் 90 தொகுதிகள், துணை முதல்வர் பதவி தருவதாக கேட்டதாக ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
இதனையே விஜய்க்கு முன்னதாக என்னிடமும் அதிமுக பேசியது. துணை முதல்வர் பதவி தரமாட்டேன் என அதிமுக சொல்லி இருக்காது. இரு கட்சிகளுக்கும் ஒத்துவராத சூழ்நிலையால் கூட்டணி அமையாமல் பிரிந்திருக்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி போல பொரணி பேசிக் கொண்டிருக்க முடியாது. தேர்தல் கூட்டணி வேறு; ஆட்சிக்கான கூட்டணி வேறு என்று நான் எப்போதும் கூறவே இல்லை.
சீமான் பேட்டி
2006-ம் ஆண்டு தேர்தலைப் போல, எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை வரும் போது நாம் தமிழர் கட்சியின் முடிவு குறித்து அப்போது தெரிவிப்போம். டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்.
இவ்வளவு நாள் அப்படி இருந்துள்ளதா? பேரிடர் காலங்களில் நிதி தரவில்லை; மாநிலத்துக்கு தர வேண்டிய கல்வி நிதி தரவில்லை. அப்படியான சூழலில் மத்திய அரசுக்கு வரி தரமாட்டோம் என சொல்லி இருந்தால் டெல்லியின் அவுட் ஆப் கண்ட்ரோலில் தமிழ்நாடு இருக்கிறது என அர்த்தம்.
ஆனால் வரியையும் கொடுத்துவிட்டு அவுண்ட் ஆப் கண்ட்ரோல் என பேச முடியாது. அண்டர் தி கண்ட்ரோல் என்பதுதான் சரி என தெரிவித்துள்ளார்.