அதிமுக அடுத்தடுத்து அதிரடியான முடிவுகள் - பாஜகவுக்கு செக் வைக்க திட்டமா?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. இதனிடையே திமுக - அதிமுக கூட்டணி கட்சிகள் விரைவாக தேர்தல் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு வருகின்றன. திமுக - காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில் அதிமுக - பாஜக இடையேவும் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டவில்லை.
அதற்கு முன்னதாகவே அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதில் முதல்வர், துணை முதல்வர் முக்கிய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. இந்நிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையும் தயார் என்றும் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிமுக அமைச்சர்களின் தொகுதியை பாஜக கேட்டு வருவதால் பேச்சுவார்த்தை இழுபறியிலே இருந்து வருகிறது. அதற்கு முன்னதாகவே அதிமுக பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் பாமக உடன் மட்டுமே தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகியுள்ளது.