நாளை கூடுகிறது அதிமுக MLA-க்கள் கூட்டம்

Tamil nadu ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Thahir Oct 15, 2022 11:44 AM GMT
Report

எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் தலைமையில் நாளை மாலை 5 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் கூட உள்ளது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் 17ம் தேதி கூடும் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும் என தகவல் கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகிற 17-ஆம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த கூட்டத்தொடரில் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை கூடுகிறது அதிமுக MLA-க்கள் கூட்டம் | Aiadmk Mlas Meeting Tomorrow

மேலும், அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை நிலவி வரும் நிலையில்,ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருக்கைகள் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். இந்த நிலையில், நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.