மீண்டும் செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை : சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

ADMK
By Irumporai Sep 13, 2022 02:11 AM GMT
Report

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது வரிசையாக வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியவை சோதனை நடத்தி வருகின்றனர்.

மீண்டும் ஐடிரெய்டு

அந்தவகையில் தற்போது மீண்டும் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய்பாஸ்கர் மற்றும் வேலுமணி ஆகியோர் வீடுகளில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றது.

மீண்டும்  செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை : சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் | Aiadmk Ministers C Vijayabaskar And S P Velumani

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

5 இடங்களில் சோதனை

மேலும் எஸ்.பி.வேலுமணி தொடர்பாக தொண்டமுத்தூர், வடவள்ளி உள்ளிட்ட 5 இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் புதுக்கோட்டையிலுள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் இருவர் மீது முறைகேடு புகார் பதியப்பட்டு அந்தப் புகார் தொடர்பாக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும்  செக் வைத்த லஞ்ச ஒழிப்புத்துறை : சிக்கலில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் | Aiadmk Ministers C Vijayabaskar And S P Velumani

அதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல, அரசுக்கு ₹500 கோடி இழப்பினை ஏற்படுத்தியத்காக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.