நேருக்கு நேர்: அதிமுகவின் 25 அமைச்சர்களையும் எதிர்த்து களம் இறங்கும் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தான்.!
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. அதிமுக ஏற்கனவே 177 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் திமுக இன்று நேரடியாக போட்டியிடும் 173 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. ஏற்கனவே அதிமுக அமைச்சர்களை எதிர்த்து திமுக நேரடியாக களம் கானும் என ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி 25 அதிமுக அமைச்சர்களை எதிர்த்து திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
1. எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து சம்பத் குமார் என்கிற புதுமுகம் போட்டியிடுகிறார்
2. போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.
3.ராயபுரம் தொகுதியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எதிர்த்து ஐட்ரீம் இரா.மூர்த்தி போட்டியிடுகிறார்
4. ஆவடி தொகுதியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் எதிர்த்து சா.மு.நாசர் போட்டியிடுகிறார்
5. மதுரவாயலில் பென்ஜமினை எதிர்த்து காரப்பாக்கம் கணபதி போட்டியிடுகிறார்.
6. விழுப்புரம் தொகுதியில் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்தை எதிர்த்து லட்சுமணன் என்பவர் போட்டியிடுகிறார்
7. கடலூர் தொகுதியில் எம்சி சம்பத் எதிர்த்து கோ.அய்யப்பன் போட்டியிடுகிறார்
8. ஆரணி தொகுதியில் சேவூர் ராமச்சந்திரனை எதிர்த்து எஸ்.எஸ் அன்பழகன் போட்டியிடுகிறார்.
9.ஜோலார்பேட்டை கேசி வீரமணியை எதிர்த்து க. தேவராஜி போட்டியிடுகிறார்.
10. ராசிபுரம் (தனி) தொகுதியில் சரோஜாவை எதிர்த்து மதிவேந்தன் போட்டியிடுகிறார்
11. பாலக்கோடு தொகுதியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் எதிர்த்து பி.கே.முருகன் போட்டியிடுகிறார்
12. குமாரபாளையத்தில் மின்சார துறை அமைச்சர் தங்கமணி எதிர்த்து எம்.வெங்கடாசலம் போட்டியிடுகிறார்
13. தொண்டாமுத்தூரில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி எதிர்த்து ஜல்லிக்கட்டு புகழ் கார்த்திகேய சேனாதிபதி போட்டியிடுகிறார்
14. கோபிசெட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையனை எதிர்த்து ஜி.வி. மணிமாறன் போட்டியிடுகிறார்
15. பவானியில் கருப்பணன்னை எதிர்த்து கேபி துரைராஜ் போட்டியிடுகிறார்.
16. கரூரில் எம்ஆர் விஜயபாஸ்கரை எதிர்த்து செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்
17. திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜனை எதிர்த்து முனைவர் இனிகோ. இருதயராஜ் போட்டியிடுகிறார்
19. விராலிமலை தொகுதியில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து பழனியப்பன் போட்டியிடுகிறார்
20. மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜுவை எதிர்த்து சின்னம்மாள் போட்டியிடுகிறார்.
21. திருமங்கலம் தொகுதியில் ஆர்பி உதயகுமாரை எதிர்த்து மு. மணிமாறன் போட்டியிடுகிறார்.
22. வேதாரண்யம் தொகுதியில் ஓஎஸ் மணியனை எதிர்த்து வேதரத்தினம் போட்டியிடுகிறார்
23. நன்னிலம் தொகுதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜை எதிர்த்து ஜோதிராமன் போட்டியிடுகிறார்.
24. ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜியை எதிர்த்து சௌ.தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்
25. சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் அமைச்சர் ராஜலெட்சுமியை ஈ.ராஜா போட்டியிடுகிறார்.