ஆன்லைனில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் , காரணம் என்ன?
ADMK
Edappadi K. Palaniswami
O. Panneerselvam
By Irumporai
அதிமுகவின் பொதுக்குழு ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் சென்று சேர்ந்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டத்தில் நடத்த ஏற்பாடுகள் தயாராகி வருகின்றன.
ஆன்லைனில் பொதுக்குழு

இந்நிலையில் கொரனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆன்லைன் மூலமும் பொதுக்குழுவை நடத்த மாற்ற திட்டத்தையும் தலைமைக் கழக நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்
இது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நேரடியாக நடத்தவே திட்டமிட்டுள்ள நிலையில், கொரனாவை காரணம் காட்டி அரசு அனுமதி வழங்காதப்பட்சத்தில் இந்த மாற்று திட்டத்தை பயன்படுத்தவும் தலைமை கழக நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளனர்.