நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது அதிமுக தேர்தல் அறிக்கை- நெசவாளர்கள் உருக்கம்

election aiadmk weavers melt
By Jon Mar 16, 2021 01:19 PM GMT
Report

நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை காத்து மேம்படுத்திடும் வகையில் அ.தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி, விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூணிட்டாக உயர்த்தப்படும், நெசவாளர் நல வாரியம், மழைக்கால நிவாரணம் 5000 ரூபாய் வழங்கப்படும் ஆகியவை நெவசவாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

அ.தி.மு.க தேர்தல் அறிக்கை 14ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் நெசவாளர்களுக்கு என்று இல்லாத வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர்களுக்கு அவர்கள் பெற்ற கடன் தொகையில் 1 லட்சம் ரூபாய் வரை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நெசவாளர்கள் தங்கள் வாழ்கையில் ஒளியேற்றி வைக்கும் திட்டமாக இது உள்ளது என்று நெசவாளர்கள் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

நெசவாளர்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்துள்ளது அதிமுக தேர்தல் அறிக்கை- நெசவாளர்கள் உருக்கம் | Aiadmk Manifesto Lives Weavers Melt]

அதேபோல், நெசவாளர் நல வாரியம் அமைக்கப்படும், விசைத்தறிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 1000 யூணிட்டுகளாக உயர்த்தி வழங்கப்படும், மழைக்கால நிவாரணம் 5000 ரூபாய் வழங்கப்படும், கைத்தறி ஆடைகளுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும், நெசவாளர்களுக்கு ஏற்ற வகையில் நூல் விலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நெசவாளர்களுக்கான அனைத்து அறிவிப்புகளையும் நெசவாளர்கள் மகழ்ச்சியுடன் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது நெசவாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.