தேர்தலில் தோற்றால் அதிமுக சசிகலா வசம் போகுமா? - உண்மையை போட்டுடைத்த அமைச்சர்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரம் காட்டி வருகின்றன. தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்புகளும் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சர்வேக்கள், வரும் தேர்தல் எதிர்கட்சிக்கு சாதகமாக இருப்பதாகவே கூறி வருகின்றன.
10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் அதிமுக மீண்டும் ஆட்சியை தக்க வைக்குமா? என்பது தற்போது கேள்விக் குறியாகவே இருக்கிறது. இந்நிலையில், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ”நான் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தலைவாசலில் உலகத் தரத்தில் பூங்கா அமைத்தேன்.
சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பில் ஆடு, மாடு, கோழி, மீன்கள் அங்கு வளர்க்கப்படுகிறது. இது விவசாயிகளுக்கு பயனளித்துள்ளது. இது தான் அமைச்சராக என்னை பெருமைப்பட வைத்த விஷயம்.

சசிகலா சிறைக்கு சென்ற பிறகு முதல்வர் பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கும் என முடிவு செய்தோம். அதன்படியே, செயல்பட்டு வருகிறோம். யார் கீழ் இருந்தாலும் விசுவாசமாக இருக்க வேண்டும். தேர்தலில் தோற்று விட்டால் அதிமுக சசிகலா வசம் போகாது. அப்படி நடக்க வாய்ப்பு கிடையாது.
மேலும், ஜெயலலிதா சொன்னதை போல அதிமுக ஆட்சி பல ஆண்டுகள் நீடிக்கும். அந்த அளவுக்கு முதல்வர் சிறப்பாக ஆட்சி செய்துள்ளார். அரசு கேபிள் இலவச திட்டத்தை செயல்படுத்துவது அதிமுக அரசால் மட்டுமே சாத்தியமாகும்” என்றார்