அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார்

admk madusuthannan
By Irumporai Aug 05, 2021 10:54 AM GMT
Report

அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல் நலக் குறைவால் காலமானார்.

அதிமுக அவைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல் நலக் குறைவால் காலமானார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மதுசூதனன். 1991-96 வரையிலான முதல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா இவரை அதிமுக அவைத் தலைவராகவும் நியமித்திருந்தார்ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒ பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கிய போது, அவருக்கு முதலில் ஆதரவு அளித்த அதிமுக தலைவர்களில் முக்கியமானவர் மதுசூதனன் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் அதிமுகவின் அவைத்தலைவராக மதுசூதனன் இருந்து வந்தார்.

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு உடல் நலம் தேறிய மதுசூதனன் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த மாதம் இவரது உடல்நிலை கவலைக்கிடமான போது, அதிமுகவில் இருந்து பல முக்கிய தலைவர்களும் மதுசூதனனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்த போது, அதே நேரத்தில் அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலாவும் அங்கு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது .

இந்நிலையில் 80 வயதான மதுசூதனன்  சிகிச்சை பலனின்றி  இன்று காலமானார். அவரது மறைவுக்கு அதிமுக தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.