ஈபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளரானது செல்லும் - உச்சநீதிமன்றம்
ஈபிஎஸ் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரானது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஈபிஎஸ் வாசமான அதிமுக
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
' ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிப்படி நடைபெற்றது. ஓபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல' என வாதிடப்பட்டது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஷ்வரி தலைமையிலான அமர்வில் ஜூலை 11ல் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வானது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது. மேலும், ஓபிஎஸ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.