மக்களின் தீர்ப்பே இறுதியானது.. அதிமுக ஆட்சி மலர்வது உறுதி - இபிஎஸ் அறிக்கை
கருத்துக் கணிப்புகளை விட மக்களின் தீர்ப்பே இறுதியானது என்றும் அதிமுக 210 இடங்களில் உறுதியாக வெல்லும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், இந்தக் கணிப்புகள் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தியுள்ளன.

தமிழகதத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு ஏப்பரல் 23 ஆம் திகதி வெற்றிகரமாக நடந்துள்ள நிலையில், எதிர்வரும் மே 4 ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்டவுள்ளது.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்திய கருத்துக்கணிப்புகளால் பெரும் குழப்பநிலை நிலவிவருகின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணி முன்னிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ள நிலையில், சில கணிப்புகள் அஇஅதிமுகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன.
மறுபுறம், ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்ட கருத்துக் கணிப்பில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கும் என்றும் திமுக-தவெகவுக்கு இடையேயேதான் பலமான போட்டி நிகழ்வதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், கருத்துக் கணிப்புகளைக் கண்டு யாரும் மனம் தளர வேண்டாம் எனவும், கருத்துக் கணிப்புகளை விட மக்களின் தீர்ப்பே இறுதியானது என்றும் அதிமுக 210 இடங்களில் உறுதியாக வெல்லும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "கருத்துக்கணிப்புகள் அப்படியே நடந்ததாக வரலாறு கிடையாது. எல்லா முரண்பட்ட கணிப்புகளையும் உடைத்தெறிந்தே அதிமுக எப்போதும் ஆட்சி அமைத்திருக்கிறது" என தெரிவித்துள்ளார்.