அன்று 2ஜி .. இப்போது ஜி-ஸ்கொயரால் திமுக ஆட்சி பறிபோகும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ADMK D. Jayakumar
By Irumporai Apr 24, 2023 08:27 AM GMT
Report

ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் வருமானவரித்துறை சோதனை மூலம் மத்திய அரசு தனது வேலையை ஆரம்பித்து உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .

வருமானவரித்துறை சோதனை

இன்று வருமான வரித்துறையினர் சென்னை , கோவையில் உள்ள ஜி -ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் தீவிர சோதனை நடத்தினர் , மேலும் தமிழகத்தை தாண்டி தெலுங்கானா, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள ஜி- ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அன்று 2ஜி .. இப்போது ஜி-ஸ்கொயரால் திமுக ஆட்சி பறிபோகும் : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் | Aiadmk Jayakumar Said That The Central Government

ஜெயக்குமார் விமர்சனம்

இந்த இரு சம்பவம் குறித்தும் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதன் அடிப்படையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சபரீசனை அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும். அவர்களிடம் இருந்து 30 ஆயிரம் கோடியை பறிமுதல் செய்ய வேண்டும்.

அதனை கைப்பற்றி விட்டால், தமிழகத்தில் சொத்துவரி, பால்விலை, மின்கட்டணம் உள்ளிட்டவையை ஏற்ற வேண்டிய கட்டாயம் இருக்காது என குறிப்பிட்டு இருந்தார். மேலும், இன்று வருமான வரித்துறை மூலம், மத்திய அரசு தங்கள் வேலையை ஆரம்பித்துள்ளது.

ஜி- ஸ்கொயரால் திமுக வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். அன்று 2ஜியால் திமுக ஆட்சி கவிழ்ந்தது. தற்போது ஜி-ஸ்கொயரால் ஆட்சி பறிபோகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து இருந்தார்.