Thursday, Jul 24, 2025

அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை : வி.கே.சசிகலா

ADMK V. K. Sasikala
By Irumporai 3 years ago
Report

அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லை என சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். திருமண நிகழ்ழ்சி ஒன்றில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா : அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஜெயலலிதா போன்ற தலைமை அதிமுகவில் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளதாக கூறினார்.

எனது தலைமையில் அதிமுக செயல்படும் என 100% எனக்கு நம்பிக்கை இருப்பதாக கூறிய சசிகலா. அதிமுகவை ஒருங்கிணைப்பது தொண்டர்கள் கையில்தான் உள்ளது அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை. பதவிக்காக அதிமுகவில் ஒருசிலர் எனக்கு எதிராக பேசுகின்றனர்.

அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை : வி.கே.சசிகலா | Aiadmk Is Not Properly As An Opposition Sasikala

அதிமுகவுக்கான தலைவர் தொண்டர்களால் தேர்வு செய்யப்படும். அந்த நிலைமை தற்போது இல்லை. என்னை கட்சியில் இணைக்கமுடியாது என சொல்வதற்கு அவர்கள் யார்? அதிமுக முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது. மாநில அரசு மத்திய அரசை முறையாக அணுகி திட்டங்களை கேட்டுப்பெற வேண்டும் எனக் கூறினார்.