அதிமுகவுக்கு உயிர் கொடுத்ததே நாங்க தான் : பாமக வழக்கறிஞர் பாலு

By Irumporai Jan 03, 2023 08:10 AM GMT
Report

அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. பாமகவுக்கு அடையாளம் கொடுத்ததே நாங்கதான். நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால? என கேள்வி எழுப்பினார். தற்போது நன்றி மறந்து பேசுகிறார் அன்புமணி ராமதாஸ்.

பா.ம.க பதில்

இதனை தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி, பாமக தொண்டர்கள் கூட மதிக்கமாட்டார்கள் என விமர்சித்தார். ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து பாமக நிர்வாகி பாலு கூறுகையில், 1996 இல் அதிமுக பலவீனமாக இருந்தபோது ஜெயலலிதா பாமக அலுவலகத்திற்கு வந்து கூட்டணி குறித்து பேசினார்.

பாமகவால் தான் ஜெயலலிதா முதலமைச்சரானார் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. அதிமுக பிளவு பட்டிருப்பது குறித்து அன்புமணி கூறிய கருத்துக்கு அதிமுகவின் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார். அதிமுக பிளவுபட்டிருப்பது குறித்து குழந்தைகளுக்கே தெரியும்.

அதிமுகவுக்கு உயிர் கொடுத்ததே நாங்க தான் : பாமக வழக்கறிஞர் பாலு | Aiadmk Is Divided Bam Executive Balu

எடப்பாடி தெளிவுபடுத்த வேண்டும்

அதிமுக விழும்போதெல்லாம் பாமக உதவி செய்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், ஜெயக்குமாரின் கருத்து குறித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவுபடுத்த வேண்டும்.

2001 தேர்தலின் போது எங்களிடம் கூட்டணி வைப்பதற்காக ஜெயலலிதா அவர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்தார். நாங்கள் எப்போதும் எங்களால் தான் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தார்.

எங்களால் தான் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாண்டுகள் முதல் அமைச்சராக இருந்தார், ஜெயக்குமார் அமைச்சராக இருந்ததற்கு பாமக தான் காரணம் என்று நாங்கள் ஒருபோதும் சொன்னதில்லை. 

தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் தான் கூட்டணி பற்றி முடிவு எடுக்க முடியும் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைக்க தெரிவித்துள்ளார்