அதிமுகவினை எந்தக் கரையான்கள் வந்தாலும் அழிக்க முடியாது - ஜெயக்குமார்

aiadmk jayakumar
By Irumporai Oct 28, 2021 09:00 AM GMT
Report

சசிகலாவுக்கு அதிமுகவில் எந்த காலத்திலும் இடமில்லை  அதிமுக என்பது ஒரு எஃகு கோட்டை, எந்தக் கரையான்கள் வந்தாலும் அதனை அழிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் சசிகலாவிற்கோ, அவரது குடும்பத்தினருக்கோ இன்றைக்கும், என்றைக்கும் இடமில்லை. அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்பதில் தலைமை உறுதியாக உள்ளது. ஒருங்கிணைப்பாளரின் கருத்துக்கு எதிர் கருத்து சொன்னால் அது சரியாக இருக்காது.

கட்சியின் நிலைப்பாடு சசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை என்பதே. சசிகலாவுக்கு அதிமுகவில் எந்தக் காலத்திலும் இடமில்லை; அதிமுக என்பது ஒரு எஃகு கோட்டை, எந்தக் கரையான்கள் வந்தாலும் அதனை அழிக்க முடியாது.

சசிகலாவை ஆதரிப்பவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படும் என்பதை அதிமுக நிலைப்பாடு. டிடிவி தினகரன் இல்லத் திருமணத்திற்கு சென்ற ஓபிஎஸ் சகோதரர் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா..? என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அனைத்தையும் கட்சி கவனித்துக்கொள்ளும் என்று பதிலளித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசும்போது :

சசிகலா அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?" என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், அவர்களை ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். புரட்சிதலைவர் எம்ஜிஆரின் நோக்கத்தின்படி தொண்டர்கள் இயக்கமாகவே அதிமுக உள்ளது.

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். இந்த பேட்டி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This