தமிழை, தமிழ் மரபை பாதுகாக்க அதிமுக அரசு தவறிவிட்டது - திமுகவின் என்.ஆர்.இளங்கோ
தமிழை பாதுகாக்க, தமிழ் மரபை பாதுகாக்க அதிமுக அரசு தவறிவிட்டது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “2015ம் ஆண்டிலிருந்து கீழடி அகழாய்வு ஆரய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அமைச்சர் கா.பாண்டியராஜன், கீழடியின் தொன்மை காக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் 159 இடங்களில் அகழாய்வு இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் கீழடி மற்றும் கொடுமணல் ஆகிய 2 இடங்களில் பகுதியில் மட்டுமே அகழாய்வு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், கீழடியை பாதுகாத்து வேளாண் மண்டலமாக மாற்ற மத்திய அரசும் முன்வரவில்லை. தமிழக அரசும் அதற்க்கு பரிந்துரை செய்யவில்லை.
கீழடியில் கி.முக்கு முன் 300 மேற்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழை பாதுகாக்க, தமிழ் மரபை பாதுகாக்க அதிமுக அரசு தவறிவிட்டது என்று பேசினார்.