அண்ணாமலைக்கு தகுதி இல்லை : அதிமுக கண்ணாடி அல்ல, சமுத்திரம் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
பாஜகவினர் அதிமுகவில் இணைந்தது தொடர்பான விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
எடப்பாடி ஆலோசனை
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக – பாஜக கூட்டணியில் மோதல் வெடித்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
ஜெயக்குமார்
இந்த நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கண்ணாடி அல்ல, சமுத்திரம். அந்த சமுத்திரம் கல் வீசினால் காணாமல் போய்விடும். அதிமுகவில் தானாக வந்து இணைகிறார்கள், நாங்கள் யாரையும் இழுக்கவில்லை என அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்தார்.
அண்ணாமலைக்கு தகுதியில்லை
அசுர வேகத்தில் அதிமுக வளர்வதால் பிற கட்சியினர் தானாக முன்வந்து கட்சியில் இணைகின்றனர். கட்சியில் இணைவதை காழ்புணர்ச்சியோடு அணுகக்கூடாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போன்று இனி ஒரு தலைவர் பிறக்க முடியாது. பாஜக தலைவர்கள் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். ஜெயலலிதா போன்ற தலைவருடன் அண்ணாமலை தன்னை ஒப்பிட்டு பேசக்கூடாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பக்குவத்தோடு ஏற்கவேண்டும் என்றார்

மேலும், எடப்பாடி பழனிசாமி படத்தை எரித்தவர்களை பாஜகவில் இருந்து நீக்க வேண்டும். கட்சியினரை அந்த கட்சியின் தலைவர் கட்டுப்படுத்த வேண்டும். ஒன்னரை கோடி தொண்டர்கள் கொண்ட அதிமுகவினர் கிளர்ந்து எழுந்தால், அவர்களால் ஈடுகட்ட முடியாது அண்ணாமலை எப்படி தலைவரானார் என்பது குறித்து பேச விரும்பவில்லை. ஆனால், ஜெயலலிதா மாதிரியான தலைவர் என்று சொல்ல அண்ணாமலைக்கு தகுதி இல்லை என்றும் ஜெயலலிதா போன்ற தலைவரை என கூற இந்தியாவில் யாருக்கும் தகுதியில்லை, பாஜகவுடன் கூட்டணி தொடரும் எனக் கூறினார்