பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு : எடப்பாடிக்கு புதிய சிக்கல் ?
அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஓபிஎஸ் தாக்கல்
இந்நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் தேர்தலுக்கு தடை கேட்டு தொடர்ந்துள்ள அவசர வழக்கின் மீது இன்று விசாரணை நடத்தப்படுவதால், எடப்பாடி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், நீதிமன்றம் எடுக்கும் முடிவை பொறுத்தே அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்வு நடைபெறுமா, இல்லையா என்பது தெரியவரும்.
இந்த வழக்கை உடனே விசாரணைக்கு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் அவர்கள் சார்பில் வக்கீல்கள் முறையிட்டனர்.
இன்று விசாரணை
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி, இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு விசாரிக்க அனுமதி வழங்கினார். இதன்படி, இந்த வழக்கை நீதிபதி கே.குமரேஷ்பாபு இன்று காலை 10 மணிக்கு விசாரிக்க உள்ளார்.
இதற்கிடையே சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று கட்சியின் மூத்த நிர்வாகிகள், சட்ட வல்லுனர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். தேர்தலுக்கு சிக்கல் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து அப்போது ஆலோசித்ததாக கூறப்படுகின்றது.

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
